என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'திமுக கூட்டணியிலேயே தேர்தலை சந்திப்போம்' - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டம்
- திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம்
- மதச்சார்புள்ள அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே எங்களுடைய முதல் இலக்கு
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு அமைந்த திமுக கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டு பெறுவோம் என்று சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் நேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகம், "மதச்சார்புள்ள அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே எங்களுடைய முதல் இலக்கு. 2026 தேர்தலில் திமுக கூட்டணியில்தான் சந்திப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
Next Story






