என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசுப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக வாட்டர்மெலன் ஸ்டார் - வெளியான செல்பி வீடியோவால் சர்ச்சை
    X

    அரசுப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக 'வாட்டர்மெலன் ஸ்டார்' - வெளியான செல்பி வீடியோவால் சர்ச்சை

    • திவாகர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
    • பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.

    திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.

    தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.

    இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில், அரசு பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக திவாகர் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அரசுப்பள்ளியில் மாணவர்களிடையே செல்பி வீடியோ எடுத்த திவாகர் நடிப்பு அரக்கன் என்று கத்த மாணவர்களும் நடிப்பு அரக்கன் என்று கூச்சலிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சமீப காலமாக இன்ஸ்டா பிரபலங்களை பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×