என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய்-பத்திரமாக மீட்ட அதிகாரிகள்
- ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது.
- இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
சென்னை:
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், கோலாலம்பூரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 9.15 மணி அளவில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் விஜய்யை பார்ப்பதற்காக ரசிகர்கள், த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை பார்ப்பதற்காக தாக ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காருக்குள் ஏறச்சென்ற விஜய், நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனெ அவரை மீட்டு காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன்பின், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






