என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து விஜய் அரசியல் செய்கிறார் - பரம்பொருள் மகாவிஷ்ணு விமர்சனம்
- சுற்றி இருப்பவர்களால் விஜய்க்கு பிரச்சனை.
- அரசியலில் ரசிகர்களை பக்குவப்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணுவிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மகாவிஷ்ணு, "அரசியல் என்பது விளையாட்டல்ல, சுற்றி இருப்பவர்களால் விஜய்க்கு பிரச்சனை. ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து விஜய் அரசியல் செய்கிறார். இன்னும் அவருக்கு கவனம் தேவை. அரசியலில் ரசிகர்களை பக்குவப்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
Next Story






