என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த விஜய் - த.வெ.க. புதிய அறிவிப்பு
- பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர்.
- இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை தொடங்கினார். விஜயின் வருகையில் நேற்று திருச்சி தொண்டர்களால் குலுங்கியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் பிரசார களத்திற்கு விஜயால் நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர். இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பெரம்பலூர் மக்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






