என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    யானை- தேங்காய், வாழைப்பழம் குட்டிக்கதை கூறி திமுக-வை மறைமுகமாக விமர்சித்த விஜய்
    X

    யானை- தேங்காய், வாழைப்பழம் குட்டிக்கதை கூறி திமுக-வை மறைமுகமாக விமர்சித்த விஜய்

    • இங்கு இருப்பது ஒன்றை யானை அல்ல. இரட்டை யானை, இரட்டை போர் யானைகள்.
    • என் சிங்கப் பெண்கள். உங்களை யாரும், எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது.

    மகாபலிபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசும்போது ஒரு குட்டிக்கதை கூறினார்.

    விஜய் கூறிய குட்டிக்கதை பின்வருமாறு:-

    ஒரு பெரிய கோவில் யானை இருந்ததாம். அதை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால் ஜெகஜால கில்லாடி ஒருவர் தேங்காய்க்குள் சுண்ணாம்பை வைத்து ஏமாற்றி விட்டார். ஜெகஜால கில்லாடியின் நண்பர் அவரிடம் சென்று, இந்த யானையை ஏமாற்ற முடியாதே. எப்படி ஏமாற்றினாய் என்று கேட்டாராம். அது தொழில் ரகசியம் என்றாராம்.

    பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, ஜெகஜால கில்லாடியின் நண்பர் அந்த யானைக் கதையை நினைவுப்படுத்தி, அந்த யானை ஏமாறாதே? ஒரேயொரு முறை தெரியாமல் ஏமாந்திருக்குமோ? என்று கூறியுள்ளார். அப்போது ஜெகஜால கில்லாடி எனது திறமை மீது நம்பிக்கை இல்லையா? 2-வது முறையாக என்ன செய்கிறேன் பார்க்கிறியா?

    மீண்டும் ஒருமுறை அந்த யானையை ஏமாற்றுகிறேன் என்று சொல்லி, ஜெகஜால கில்லாடி பஞ்சு வைத்த போலி வாழைப்பழத்தை யானையிடம் நீட்டியுள்ளார். யானையும் பழத்தை வாங்குவதுபோல் தும்பிக்கையை அவர் கிட்ட கொண்டு வந்து, ஜெகஜால கில்லாடியை அப்படியே தூக்கி ஒரு சுழற்று சுழற்றி.., அதன்பின் என்ன நடத்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.

    அடிப்பட்டு கிடந்த ஜெகஜால கில்லாடியிடம் அவரது நண்பர், யானைக்கு நினைவுத்திறன் அதிகம் என்றாராம். கதையில் யானை யாரென்றால் நமது வாக்காளர்கள். ஜெகஜால கில்லாடி யாரென்று கேட்டால், உங்கள் நினைவுக்கு யாராவது வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா..

    அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்.. இங்கு இருப்பது ஒன்றை யானை அல்ல. இரட்டை யானை, இரட்டை போர் யானைகள். என் சிங்கப் பெண்கள். உங்களை யாரும், எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது.

    Next Story
    ×