என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது - டி.டி.வி.தினகரன் கண்டனம்
- இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.
- முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்துள்ள நிலையில், அதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
* இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.
* எங்களின் வழிகாட்டியாக உள்ள பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது.
* முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






