என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு
- மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் களம் கண்டபோது அவர்களுக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது.
- சின்னம் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்தப்படும் என்பது கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தே அமையும்.
கமல்ஹாசனின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முதலில் களம் கண்டபோது அவர்களுக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது.
தற்போதைய அரசியல் சூழலில், மக்கள் நீதி மய்யம் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளதால், வரும் தேர்தல்களில் இந்தச் சின்னம் எந்தெந்த தொகுதிகளில் பயன்படுத்தப்படும் என்பது கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தே அமையும்.
Next Story






