என் மலர்
இந்தியா
Budget 2025 Live Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
- 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்.
- 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல்.
பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் 2025- 26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
தொடர்ச்சியாக 8வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Live Updates
- 1 Feb 2025 10:48 AM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
- 1 Feb 2025 10:42 AM IST
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- 1 Feb 2025 10:37 AM IST
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 'தயிர் மற்றும் சர்க்கரை' ஊட்டினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.











