என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கம், வெள்ளி விலை  - இன்றைய நிலவரம்
    X

    GOLD PRICE TODAY: சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று காலையில் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,02,000-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.272-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    6-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,640

    5-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,080

    4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    7-1-2026- ஒரு கிராம் ரூ.277

    6-1-2026- ஒரு கிராம் ரூ.271

    5-1-2026- ஒரு கிராம் ரூ.266

    4-1-2026- ஒரு கிராம் ரூ.257

    3-1-2026- ஒரு கிராம் ரூ.257

    Next Story
    ×