என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY: தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 2-ந்தேதி முதல் விலை சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இறக்கம் இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 465-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 120-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
4-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600
3-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,23,720
2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280
1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200
28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
4-03-2026- ஒரு கிராம் ரூ.295
3-03-2026- ஒரு கிராம் ரூ.315
2-03-2026- ஒரு கிராம் ரூ.315
1-03-2026- ஒரு கிராம் ரூ.325
28-02-2026- ஒரு கிராம் ரூ.320






