என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: 2-வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
    X

    GOLD PRICE TODAY: 2-வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம், வெள்ளி விலை 'கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் 'மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது.

    அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

    இதேபோல், வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

    இப்படியாக நேற்று முன்தினம் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை, எந்த வேகத்தில் ஏறியதோ, நேற்று அதே வேகத்தில் இறக்கம் கண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

    அதன்படி, தங்கம் விலை நேற்று முன்தினத்தை விட நேற்று காலையில் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் குறைந்திருந்தது. பிற்பகலில் மேலும் கூடுதலாக கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் சரிந்திருந்தது. ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.350-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை நேற்றும் இன்றும் சவரனுக்கு ரூ.15,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800

    29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400

    28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880

    27-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680

    26-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-1-2026- ஒரு கிராம் ரூ.405

    29-1-2026- ஒரு கிராம் ரூ.425

    28-1-2026- ஒரு கிராம் ரூ.400

    27-1-2026- ஒரு கிராம் ரூ.387

    26-1-2026- ஒரு கிராம் ரூ.375

    Next Story
    ×