என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு
- தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்பட்டது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை உயர்ந்து வந்தது. பின்னர் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை அதிகரித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-11-2024- ஒரு கிராம் ரூ. 103
09-11-2024- ஒரு கிராம் ரூ. 103
08-11-2024- ஒரு கிராம் ரூ. 103
07-11-2024- ஒரு கிராம் ரூ. 102
06-11-2024- ஒரு கிராம் ரூ. 105






