என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீட் ஒழிப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - உதயநிதி ஸ்டாலின்
- இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு
- நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
தமிழ்நாடு அரசின் சமத்துவ நாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
* பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி உள்ளது
* எல்லோருக்கு எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
* இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு
* தமிழகத்தை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கண்டறிந்து நாம் வீழ்த்த வேண்டும்.
* பட்டியலின, பழங்குடியின மக்கள், சமூகம் மற்றும் பொருளாதார விடுதலை அடைய திமுக அரசு பாடுபடும்.
* நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்திற்கான நீதி, நீட் ஒழிப்பில் அரசு உறுதி
* நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது
* திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நாளும் சமத்துவ நாளாக அ நாளாக அமையட்டும்
என்று தெரிவித்தார்.






