என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- சுதர்சன் ரெட்டி
    X

    கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- சுதர்சன் ரெட்டி

    • கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது தமிழ்நாடு.
    • தொலைநோக்குப் பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழ்நாடு.

    சென்னை வந்துள்ள இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

    அவர், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது, இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல அரசியலமைப்புக்கே ஆபத்து வந்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

    கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதில் முன்னோடியாக விளங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    கல்வி, சுகாதாரத்தில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது தமிழ்நாடு. தொலைநோக்குப் பார்வையிலும் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது தமிழ்நாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×