என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித் ஷா உடன் பேசியது என்ன?- ஜி.கே. வாசன் விளக்கம்
    X

    அமித் ஷா உடன் பேசியது என்ன?- ஜி.கே. வாசன் விளக்கம்

    • தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பேசினேன்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்தேன்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார். இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

    அமித் ஷாவை சந்தித்து பேசியது குறித்து ஜி.கே. வாசன் கூறியதாவது:-

    அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இருந்தபோதிலும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், இன்றைய அரசியல் களநிலவரத்தை பற்றியும் பேசினேன்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களை திசைதிருப்ப பல்வேறு தேவையற்ற விசயங்களை பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினேன்.

    இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

    அமைச்சர் அநாகரிகமாக பேசியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, பொறுப்புள்ள அமைச்சர் ஒருவடைய பேச்சு அநாகரிமானது, அருவருப்பானது. இதுதான் அவர்களுடைய மாடலா? எனக் கேட்க விரும்புகிறேன். சற்றும் தாமதிக்காமல் அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அவரை நீக்க வேண்டும். இதுதான் தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணமாக உள்ளது என்றார்.

    Next Story
    ×