என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிகாரப் பகிர்வு தேவை... தொகுதி பங்கீட்டில் பேரம் பேசும் கட்சியாக வி.சி.க. இருக்காது - திருமாவளவன்
    X

    அதிகாரப் பகிர்வு தேவை... தொகுதி பங்கீட்டில் பேரம் பேசும் கட்சியாக வி.சி.க. இருக்காது - திருமாவளவன்

    • தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியில் தொகுதிகள் வேண்டும் என கோரியுள்ளோம்.
    • தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - வி.சி.க. இடையே முதற்கட்ட தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கியது. வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலைமையிலான குழுவினர் தி.மு.க.வின் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தி.மு.க. உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தநிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எங்களின் விருப்பம் என்ன என்பதை தெரிவித்துள்ளோம். முதல்வரிடம் பேசிய பிறகு தி.மு.க. குழு மீண்டும் அழைக்கும்.

    * விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வலிமைக்கேற்ப இடங்கள் வேண்டும் என்று தி.மு.க.விடம் கேட்டிருக்கிறோம்.

    * தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் பேரம் பேசும் கட்சியாக விசிக இருக்காது. விசிக பேரம் பேசும் கட்சியல்ல.

    * முதலமைச்சருடன் பேசிய பின்னர் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.

    * தி.மு.க. கூட்டணியில் புதுச்சேரியில் தொகுதிகள் வேண்டும் என கோரியுள்ளோம்.

    * புதுச்சேரியில் தனித்தொகுதியும் வேண்டும், பொதுத்தொகுதியும் வேண்டும்.

    * தொகுதிப் பங்கீட்டில் அதிகாரப் பகிர்வு தேவை.

    * ஆட்சியில் அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை. தொகுதி ஒதுக்கீட்டில் தான் கேட்கிறோம்.

    * தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும்.

    * தமிழகத்தை பொருத்தவரை மோடி வித்தை எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×