என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க. மதவாதத்திற்கு முருகன் மயங்க மாட்டார் - திருமாவளவன்
    X

    பா.ஜ.க. மதவாதத்திற்கு முருகன் மயங்க மாட்டார் - திருமாவளவன்

    • வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்ற பெயரில் அரசியல் நடத்துகிறது.
    • மதவாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநிலம் விட்டு மாநிலங்களில் பா.ஜ.க. மதவாத அரசியலை வடிவமைத்து மாற்றி கையில் எடுக்கிறது. வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்ற பெயரில் அரசியல் நடத்துகிறது. மேற்கு வங்காளத்தில் துர்கா, காளியை கையில் எடுக்கிறது. தமிழகத்தில் முருகக் கடவுளை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுத்திகளில் ஒன்று.

    பிற மாநில மக்கள் மயங்குவது போல தமிழக மக்கள் ஒருபோதும் இவர்களின் மதவாத அரசியலுக்கு மயங்க மாட்டார்கள். முருகனும் மயங்க மாட்டார். தமிழ்க் கடவுள் முருகன் இவர்களை விரட்டியடிப்பார். மதவாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×