என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாளை மறுநாள் 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா: விஜய் பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கிறார்
    X

    நாளை மறுநாள் 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா: விஜய் பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கிறார்

    • தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 4-ம் கட்ட பரிசளிப்பு விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அடுத்ததாக 3-ம் கட்ட பரிசளிப்பு விழா நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. விழாவில் பங்கேற்போருக்கு அந்தந்த மாவட்ட செயலாளர் வாரியாக டிஜிட்டல் அடையாள அட்டைகளை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து 4-ம் கட்ட பரிசளிப்பு விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அடுத்த வாரம் நடைபெறும் விழாவில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. அனைத்து விழாக்களிலும் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகள் வழங்கி மாணவ, மாணவிகளை கவுரவிக்க இருக்கிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.

    Next Story
    ×