என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலையில் சுடும் வெயில்.. மாலையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.!
- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
- சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
குறிப்பாக, வடபழனி, வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
Next Story






