என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுகவின் பிரித்தாளும் அரசியலின் விளைவே வடமாநிலத்தவர் மீதான தொடர் தாக்குதல் - அண்ணாமலை
- எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது
- தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது
தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ், கோயம்புத்தூரில் வாகனம் மோதியதை தட்டிக் கேட்டதற்காக நேற்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பணியாற்றி வரும் ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் சேரன் மற்றும் சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம் பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
சமீப நாட்களாக, தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் திமுக-வின் பிரித்தாளும் அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளைத் திரும்பத் திரும்ப வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எப்போது வெறுப்புணர்வு இயல்பான ஒன்றாக மாற்றப்படுகிறதோ, அரசியல் லாபத்திற்காக ஒருவரின் அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அப்போது வன்முறை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது."
தமிழ்நாட்டினால் இந்த ஒழுக்க மற்றும் நிர்வாக வீழ்ச்சியை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.






