என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து பரிந்துரைத்த பெயர்...
- ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது.
- இந்த புயலானது ஆந்திரா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள்.
சென்னை:
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 27-ந்தேதி வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது ஆந்திரா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் சென்னையில் கனமழை பெய்யவதற்கான சாத்திக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த Montha என்று பெயரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது குறிப்பிடத்தக்கது.






