என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் சிப்காட்டில் டேங்கர் வெடித்து விபத்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
- சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் டேங்க் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது.
- ரசாயன கழிவு நீர் அருகில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது
கடலூர் அருகே சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டதால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன கழிவு நீர் புகுந்தது
இதனால் கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ரசாயன நீர் புகுந்ததைக் கண்டித்து கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story






