தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் - பிப்.20 முதல் தி.மு.க. விருப்பமனு விநியோகம்

விண்ணப்ப கட்டணம் மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் - பிப்.20 முதல் தி.மு.க. விருப்பமனு விநியோகம்
Published on

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு -புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப். 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 2 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திமுக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதிக்கு ரூ. 25,000-ஆகவும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்ப படிவத்தை திமுக தலைமை அலுவலகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com