என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு - அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    X

    திருச்செந்தூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு - அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    • வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது
    • திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன.

    மதுரை:

    தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, கோவில் குட முழுக்கு நிகழ்வுகள் தமிழில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    கோவில் தரப்பில், யாக சாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

    அதனை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×