மாணவிக்கு பாலியல் தொந்தரவு- பள்ளி தலைமை ஆசிரியர் கைது

தலைமை ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மாணவிக்கு பாலியல் தொந்தரவு- பள்ளி தலைமை ஆசிரியர் கைது
Published on

தேன்கனிக்கோட்டை:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த ஆனைமலையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 51). கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அன்னை நகரில் தங்கியிருந்து அஞ்செட்டி தாலுகாவில் உள்ள உரிகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் 10 வயதுடைய 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

இது தொடர்பாக மாணவியின் தாய் குழந்தைகள் அவசர கால உதவி எண்ணிற்கும், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியர் சுதாகரனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்ததால் கடந்த டிசம்பர் மாதம் தான் இந்த பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com