என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #Vijay வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போது காலை வாரி விட்டீர்களே... சங்கீதாவுக்கு இலங்கை எம்.பி. கண்டனம்
    X

    #Vijay வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போது காலை வாரி விட்டீர்களே... சங்கீதாவுக்கு இலங்கை எம்.பி. கண்டனம்

    • ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன்.
    • எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது.

    விஜய் அரசியல் பயணத்தில் சந்திக்கும் முதல் தேர்தல் 2026 தேர்தல். இந்த நேரத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு செய்திருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்று மனுதாக்கல் செய்வது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் இலங்கை எம்.பி. அர்ச்சுனா முதன் முதலாக சங்கீதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    27 வருடம் காத்திருந்து ஒருவர் தனது வாழ்க்கையின் உச்சகட்டத்தில் நிற்கும் போது காலை வாரி விட்டீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று சொல்லுங்கோ... அங்கு போய் ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன். எப்படிப்பட்ட இனப்பிறப்பு என்று யோசித்து பாருங்கள். எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல. ஒரு யாழ்ப்பாணத்து பாராளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணத்து தமிழனாக இதை நினைத்து வருத்தப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அர்ச்சுனா எம்.பி.யின் வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×