என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SILVER PRICE TODAY: இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த வெள்ளி விலை
- இன்று ஒரே நாளில் 2வது முறையாக வெள்ளியின் விலை சரிந்துள்ளது.
- ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை 'கிடுகிடு'வென ஏறுவது, பின்னர் 'மளமள'வென சரிவது என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1,190-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 520-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
இதேபோல், வெள்ளி விலையும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.25-ம், கிலோவுக்கு ரூ.25 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.425-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இப்படியாக நேற்று முன்தினம் அதிரடியாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை, எந்த வேகத்தில் ஏறியதோ, நேற்று அதே வேகத்தில் இறக்கம் கண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 2வது முறையாக வெள்ளியின் விலை சரிந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று காலை கிலோவுக்கு ரூ.55,000 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.30,000 குறைந்தது.
அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.3.20 லட்சத்திற்கும் விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.






