என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரை நிமிடத்தில் ரத்தினச் சுருக்கமாக பேச வேண்டும் - மாநாட்டில் ராமதாஸ் அறிவுரை
- வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.
- மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, "இந்த சமூகத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து நாம் தமிழராக ஒன்றிணைய வேண்டும். அப்படி நடந்தால் நாம் எவரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது" என்று பேசினார்.
இதனையடுத்து குறுக்கிட்டு பேசிய ராமதாஸ், "இனிமேல் பேச வருகின்றவர்கள் இரத்தின சுருக்கமாக பேச வேண்டும். இனிமேல் 1 நிமிடம் அல்ல அரை நிமிடத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்கள். சமயம், சமுதாயம், நல்லிணக்கம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது. , சாதி, மதம் எல்லாம் ஒன்றுதான் நல்ல இணக்கத்துடன் வாழ வேண்டும் என்று கூறினால் முடிந்து விட்டது. ஆகவே நிறைய பேர் பேச உள்ளதால் இரத்தின சுருக்கமாக பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.






