என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருமாவளவனை சந்தித்து தனது மகளின் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழ் வழங்கிய செல்வப்பெருந்தகை
    X

    திருமாவளவனை சந்தித்து தனது மகளின் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழ் வழங்கிய செல்வப்பெருந்தகை

    • நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.

    அவ்வகையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் அவரது தாயார் பெரியம்மாள் அவர்களுக்கும் இன்று 22.02.2026 எனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கினேன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×