சீமான் சின்னம் இப்போது ஐஜேகே-விற்கு... தேர்தல் ஆணையம் அதிரடி

மக்களவை தேர்தலில் மைக் சின்னம் நாதகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே இடம்பெற்றுள்ளது
சீமான் சின்னம் இப்போது ஐஜேகே-விற்கு... தேர்தல் ஆணையம் அதிரடி
Published on

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி எஸ்ஆர்எம் குழுமத்தலைவர் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

தேர்தலில் போட்டியிட தனி சின்னம் ஒதுக்கக்கோரி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே-விற்கு இந்தத் தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடும் பட்சத்தில் இந்தச் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காரணம் அதிமுக கூட்டணியில் கட்சிக்கு 5க்கும் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்டார். மேலும் மக்களவைத் தேர்தலில் 'மைக்' சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com