என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துடன் சீமான் சந்திப்பு - புதிய கூட்டணிக்கு முயற்சியா?
- ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
- எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிட தயாராகி வருகிறது.
இருப்பினும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சீமானை சேர்ப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் நடத்தி வரும் இந்த ரகசிய பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சீமான் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருவரும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துடனான இந்த சந்திப்பு பற்றி சீமானிடம் கேட்டபோது, எங்கள் இருவருக்குமிடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே தற்போதும் சந்தித்துள்ளேன். அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.






