என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கல்வி நிதியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு மனு- உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- 2151 கோடி ரூபாயை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு குற்றச்சாட்டு.
- மனுவை உடனடியாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு.
கல்வி நிதியாக தமிழக அரசுக்கு 2151 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்றால்தான் நிதியை விடுவிப்பதாக தெரிவிக்கிறது. இதனால் உடனடியாக நிதியை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு உதரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பிராஷாந்த குமார் மிஷ்ரா, மன்மோகன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோடை விடுமுறை வேலை நாட்களுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். எந்த அவசரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம், கல்வி நிதியை நிறுத்தி வைத்திருப்பதாக மத்திய நிதியமைச்சகத்திற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
Next Story






