என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எச்சூர் கிராம விளைநிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிடுங்கள்- ராமதாஸ்
- எச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன.
- விவசாயிகளின் மறுவாழ்விற்கு எந்தவித மாற்று இடத்தை தராமல் இழப்பீடு மட்டுமே தர முன்வருவது ஏற்புடையது அல்ல.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், எச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் உள்ளன. இதில் 950 ஏக்கர் விவசாய நிலங்களை எச்சூர், பூதனூர் மற்றும் மேட்டுப்பாளையம் சிப்காட் திட்டத்திற்காக மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளன. அந்தப் பகுதி விவசாயிகளுக்கும் இது சம்பந்தமாக அறிவிப்புகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எதிர்கால வாழ்வாதாரம் குறித்து அச்சத்தில் உள்ளனர்.
நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படும் இந்த காலத்தில், தமிழக அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் மறுவாழ்விற்கு எந்தவித மாற்று இடத்தை தராமல் இழப்பீடு மட்டுமே தர முன்வருவது ஏற்புடையது அல்ல. ஆகவே எச்சூர் கிராமத்தில் விளைநிலங்களை கையகப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் உடனே கைவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு, விவசாயத்திற்கு தகுதியற்ற வறண்ட பகுதிகளில் கட்டுமானத்திற்கு தகுதியாக உள்ள இடங்களை தேர்வு செய்து, அந்தப் பகுதியில் சிப்காட் நிறுவனங்களை அமைக்க மாநில அரசு வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






