என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. பதவி - அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
- தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






