என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 11 மாவட்டங்கள்...
    X

    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள 11 மாவட்டங்கள்...

    • இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ‘மோன்தா’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகர்கிறது. இந்த புயலானது மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, 'மோன்தா' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×