என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எனக்கு ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர் பேராசிரியப் பெருந்தகை - #MKStalin புகழாரம்
    X

    எனக்கு ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர் பேராசிரியப் பெருந்தகை - #MKStalin புகழாரம்

    • நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர்.
    • நட்புக்கும்-கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர்.

    சென்னை:

    பேராசிரியர் க. அன்பழகனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர்.

    நட்புக்கும்-கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×