என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ
    X

    கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி "ரோடு ஷோ"

    • கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
    • பிரதமர் மோடி கங்கைகொண்டசோழபுரத்துக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    திருச்சியில் ரோடு ஷோ முடித்துக் கொண்டு, விமான நிலையம் வந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.

    அங்கு பைபாஸ் சாலையை ஒட்டி பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கினார்.

    கங்கைகொண்ட மோழபுரத்திற்கு வருகை தந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர், ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வரை 2 கி.மீ. தூரம் ரோடு ஷோவாக புறப்பட்டு சென்றார்.

    அப்போது சாலையில் இருபுறமும் திரளாக கூடி நின்ற மக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பொன்னேரியிலிருந்து கோயில் வளாகம் வரை சாலையின் இருபுறமும் பா.ஜ.க., அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

    சோழர் கால வரலாற்று சிறப்புமிக்க நகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    அரியலூர் மாவட்டத்திற்கும், கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் இதுவரை பிரதமர்கள் யாரும் வந்ததில்லை. பிரதமர் மோடி கங்கைகொண்டசோழபுரத்துக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    Next Story
    ×