என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் - பிரேமலதா
திருச்செந்தூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன்.
கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்.
முருகன் அருளால் நல்ல மகத்தான கூட்டணி அமையும், அது எல்லோருக்கும் நிச்சயமாக நன்மை பயன் அளிக்கும் என்று கூறினார்
விஜய் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது நான் எப்போதும் பதில் சொல்வதில்லை.
2026 தேர்தல் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும். நாங்கள் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம் என்றார்.






