என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் 2 நாட்கள் பிரசாரம்
- முசிறியில் ரத யாத்திரை மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்.
- மணப்பாறை பஸ் நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
திருச்சி:
தே.மு.தி க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கேப்டன் ரத யாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை மறுநாள்( சனிக்கிழமை)திருச்சி வருகிறார்.
பின்னர் அன்றைய தினம் காலை அரிஸ்டோ கார்னர் பகுதியில் உள்ள எல் கே எஸ் மஹாலில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். அதன் பின்னர் மாலையில் முசிறியில் ரத யாத்திரை மற்றும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். அதன் பின்னர் இரவு திருச்சியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை (14 ம் தேதி) திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மணப்பாறை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 73 அடி உயர கட்சி கொடி கம்பத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். இந்த கொடிக்கம்பம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மணப்பாறை பஸ் நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு தே.மு.தி.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டிவி கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர். பாரதிதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






