என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம்
- புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
- ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க.வில் தலைமை நிர்வாகக்குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த குழுவை கலைத்து புதிய குழுவை ராமதாஸ் உருவாக்கினார். அந்த புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்தார்.
இந்த புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பா.ம.க.வின் நிர்வாக குழு கூட்டத்தில் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.