என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு
    X

    பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு

    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    ஜூன் 25-ந்தேதி தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

    தனித்தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக வரும் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மாவட்ட வாரியான சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×