என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
- மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
- அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. மேலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story






