என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல்- எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
- அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
- வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடக்க வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
தொடர்ந்து நாளை மறுநாள் 27-ந்தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடக்க வாய்ப்புள்ளது. மேலும் புயல் சின்னத்தின் தற்போதைய நகர்வுகளின் படி சென்னைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story






