என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்கள் தி.மு.க. அரசின் பக்கம் இருக்கிறார்கள்... நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
- தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
* தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பது தான் சவால்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் டெல்லி தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் நிலை ஏற்படும்.
* ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் இ.பி.எஸ். தலைமையில் பா.ஜ.க. PROXY ஆட்சி நடைபெற்றது.
* தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவ்வளவு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதா?
* உண்மையான பக்தர்கள் தி.மு.க. அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
* மக்கள் எப்போதும் தி.மு.க. அரசின் பக்கம் தான் இருக்கிறார்கள். நாங்கள் தான் மீண்டும் வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






