என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR பணிகளை மண்டல பொறுப்பாளர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
- பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை தீவிரமாக கண்காணிக்க தி.மு.க.வில் 8 மண்டல பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி மண்டல பொறுப்பாளர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. இவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்காக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையிலும், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் குழுவினரால் ஒவ்வொரு தொகுதியிலும் எஸ்ஐஆர் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
பூத் கமிட்டியினர் வாக்காளர் விவரங்களை சேகரித்து நிரப்ப தலைமையில் இருந்து படிவமும் செயலியும் வழங்கப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக 8 வழக்கறிஞர் குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் விசாரிக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக தி.மு.க. சட்டப் போராட்டம் நடத்தினாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து அதில் நடைபெறும் தவறுகளை கண்டறிய வேண்டும் என்று முன்னணி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.






