என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் -  அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
    X

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

    • 24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.

    சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து வருவாய் பேரிடர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நிவாரண முகாம்கள், பொதுமக்களுக்கு வழங்க தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * நீர்வளத்துறை பேரிடர் துறையுடன் இணைந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்க கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

    * 24-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * புயல் உருவாவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    * கனமழை, இடி, மின்னல் தாக்கியதில் 1-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை 31 பேரி பலி, 47 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    * வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.

    * வடகிழக்கு பருவமழையை முதலமைச்சர் சாமர்த்தியமாக கையாள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×