என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சுடுகாடு- நான் கூறியதில் தவறில்லை என அமைச்சர் ரகுபதி உறுதி
    X

    'சுடுகாடு'- நான் கூறியதில் தவறில்லை என அமைச்சர் ரகுபதி உறுதி

    • திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
    • தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு.

    திருப்பரங்குன்றம் வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டை தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது. அதைப்போலத்தான் மற்ற பழக்க வழக்கங்களையும் மாற்றமுடியாது என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    * திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேய் கதையை அரசு அவிழ்த்துவிடுவதாக நீதிமன்றம் கூறுகிறது.

    * பேய் கதை என நீதிபதிகள் கூறியதால் சுடுகாடு என்ற உதாரணத்தை நான் கூறினேன்.

    * பேய் இருக்கிறது என்று கதை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நான் சுடுகாடு என்று கூறினேன். அதில் தப்பில்லை.

    * அரசு பேய் கதைகள் சொல்கிறது என நீதிபதிகள் சொல்லும்போது நான் கூறியதில் தவறில்லை.

    * நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் பேசினேன்.

    * முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை வழக்கறிஞராகிய எனக்கும் உண்டு.

    * திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.

    * தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு என்றார்.

    Next Story
    ×