என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூடங்குளத்தில் இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
    X

    கூடங்குளத்தில் இன்று காலை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 'திடீர்' ஆய்வு

    • முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
    • பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை 8 மணி அளவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது கணினி மூலமாக டோக்கன் பதிவு செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ஊழியர் கணினி பழுதில் இருப்பதால் சீட்டு எடுக்க முடியவில்லை என்று கூறினார். உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து, டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருகிறார்கள்? எத்தனை மணிக்கு பணியை முடித்து செல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை அந்த பெண் ஊழியரிடம் கேட்டுக்கொண்டார்.

    பின்னர் பணியில் இருந்த டாக்டர்களிடம், நாள் ஒன்றுக்கு நோயாளிகள் வரும் எண்ணிக்கை, எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது? பொதுவான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் அமைச்சர் விசாரித்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகம், கட்டுப்போடும் இடம், எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் எடுக்கும் அறைகளில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள பொது நோயாளிகள் பிரிவுக்கு சென்றார்.

    அங்கே சிகிச்சையில் இருந்த மூதாட்டி உள்பட நோயாளிகளிடம் சிகிச்சைகள் தரமாக வழங்கப்படுகிறதா? உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.

    பின்னர் மருத்துவமனை வளாகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த கூடன்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.

    உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு பதிலளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×