என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உழைக்கும் மக்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும்- மன்சூர் அலிகான் கட்சி தீர்மானம்
    X

    உழைக்கும் மக்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும்- மன்சூர் அலிகான் கட்சி தீர்மானம்

    • டோல்கேட் வரி வசூலித்தல் கூடாது.
    • கனிமக் கொள்ளையை அனுமதிக்க மாட்டோம்.

    இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை:-

    மதுக்கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். சாராய ஆலைகள் ஒழிக்கப்பட்டு உணவாக, உழைக்கும் மக்களுக்காக கள்ளுக்கடைகள் தரமாக செய்யப்படவேண்டும்.

    இஸ்லாத்திற்கு எதிரானது என்றாலும், தமிழ்நாடு முழுக்க கோடிக்கணக்கில் அரசு இடம், தனியார், பொது இடங்களில் சாலை இருபுறமும் தென்னை-பனை மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும். (10 லட்சம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும்.)

    நீட் முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களை எந்தக் காரணம் கொண்டும் சிங்கள அரசு பிடிக்கவோ, கைது செய்யவோ கூடாது. கச்சத்தீவை திரும்பப் பெற்றே ஆக வேண்டும்.

    தமிழ்நாடு அரசு அடிப்படையில் நூல் முறையிலேயே கல்விக் கொள்கை அமைத்திடல் வேண்டும். கனிமக் கொள்ளையை அனுமதிக்க மாட்டோம்.

    சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தமிழ்நாட்டில் அவரவர் விகிதாச்சாரப் படியும், தமிழர்களுக்கு அனைத்து துறையிலும் தனியார் உட்பட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    டோல்கேட் வரி வசூலித்தல் கூடாது. எங்கள் கொள்கையில் ஒத்துப்போகிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். எங்களுடைய ஆதரவு கோடை மழையைப் போன்று நாட்டை குளிர்வித்து ஆதரவு தருகின்ற கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம்.

    தமிழர் நலனுக்கு புறம்பான கட்சிகளை எதிர்த்து வெகுதூரம் சென்று இலக்குகளை தாக்கி அழிக்கிற ஏவுகணைகள் போன்று இருக்கும் எங்கள் ஆட்சி நல்லாட்சி அமைய பாடுபடுவோம்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் தமிழர்களுக்கு எதிரான கட்சிகளை நார் நாராக கிழித்து தொங்க விடுவோம். தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே தமிழன் தான் ஆள வேண்டும். தமிழக மீனவர்களை யாரும் கைது செய்ய கூடாது. இதை ஒத்துக்கொள்பவர்களிடம் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். இனியும் தூங்கி கொண்டிருக்க மாட்டோம். எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் தனித்து போட்டியிட மாட்டோம் என்றார்.

    Next Story
    ×